உள்நாடு

நாட்டில் 82 கொவிட் மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) –  நாட்டில் 82 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (04) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் நேற்று முன்தினம் பதிவாகியவையென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,727 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 2,543 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,18,755 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 2,84,524 பேர் குணமடைந்துள்ளதுடன், 29,586 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின் கட்டணம் உயர்த்தப்படுமா? – இன்று இறுதி தீர்மானம்.

ஆட்சியாளர்கள் இனவாதத்தை ஏற்படுத்தினாலும் நாம் இன மதபேதமின்றி ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

editor

களனிவெளி ரயில் சேவைகள் பாதிப்பு