உள்நாடு

நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) – சில ரயில் மார்க்கங்களின் 14 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, பிரதான ரயில் மார்க்கத்தின் 6 ரயில் சேவைகளும், களனி வெளி மற்றும் கரையோர ரயில் மார்க்கங்களின் தலா 2 ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், புத்தளம் ரயில் மார்க்கத்தின் 3 ரயில் சேவைகளும், வடக்கிற்கான ஒரு ரயில் சேவையும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

மாணவன் சரியாக முடி வெட்டவில்லை என தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

editor