உள்நாடு

நாட்டில் மீளவும் மின்தடை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்னரும் இதுபோன்று நாட்டில் சில பாகங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது.

கொத்மலையில் இருந்து பியகம வரையான பிரதான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்னோட்டத்து கிடைக்கப் பெறாதமையினால் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.

அத்துடன், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாற்றத்துக்குள்ளான கொழும்பு தாமரைக் கோபுரம்!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

நீர்த்தேக்கங்களை சூழவுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரிக்கை