உள்நாடு

நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்நாட்டில் கல்வித் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உயர்தரத்தில் சித்திபெற்ற இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்.
இலங்கையில் தகவல் தொழிநுட்ப துறையில் வருடாந்தம் இருபதாயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அந்த வேலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் வருடாந்தம் சுமார் பத்தாயிரம் தகவல் தொழிநுட்ப துறைப் பட்டதாரிகள் வெளியேறுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எஞ்சிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரத்தில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை தகவல் தொழிநுட்ப தொழிற்துறை சம்மேளத்தின் கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சர்வதேச கல்வி மன்றம் – 2023’ குறித்து ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக இன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சர்வதேச கல்வி மன்றம் – 2023 ‘INFOTEL ICT’ கண்காட்சியுடன் இணைந்து நவம்பர் மாதம் 03 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற உள்ளது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கனக ஹேரத்,
இந்த நாட்டில் தற்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பது பலரது கருத்து. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனம் இவ்வாறானதொரு செயலமர்வை ஏற்பாடு செய்வது காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும்.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு தொழில்நுட்பத் திறன்களுடன் கூடிய நிபுணர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. புதிய தொழில்நுட்பத்துடன், தற்போதுள்ள கல்வி முறையும் மாற வேண்டும். தொழிநுட்ப துறைத் துறையில் வருடாந்தம் 20,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொழிநுட்ப துறைத் துறையில் பத்தாயிரம் பணியாளர்கள் மாத்திரமே உள்ளனர்.

நம் நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்களுக்கு அதிக இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை நிரப்ப வேண்டும். இதற்கு உயர்தரப் பாடசாலைக் கல்வியை முடித்த இளைஞர்களைப் பயன்படுத்தி இடைவெளியை நிரப்புவது மிகவும் அவசியம். எமது அரசாங்கம் அதில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் தேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும் முதன்மை நோக்கத்துடன் ‘DIGIECON 2030’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச கல்வி மன்றம் அரசாங்கத்தின் திட்டத்தை அடைய ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டங்களில் ஒன்றாக அழைக்கப்படலாம். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தை முன்னெடுப்பதில், இந்நாட்டில் கல்வித் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. எனவே, அனைத்து இளைஞர்களும், மாணவர்களும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

DIGIECON 2030 நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கங்களை அடைவதற்கு, கல்வி நிறுவனங்களுக்கு அவர்களின் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழிற்படையை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என Lanka Information Technology Industries (FITIS) இன் தலைவர் இந்திக்க டி சொய்சா தெரிவித்தார்.இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனத்தின் கல்விப் பிரிவின் தலைவர் அமில பண்டார,

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத் துறையின் தற்போதைய போக்குகள் குறித்து கலந்துரையாடல் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அடைவதற்கான பயிற்சிகள் மிகவும் முக்கியமானதாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படி இயங்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரம்.கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (டிஜிட்டல் கல்வி) கலாநிதி கே. பி. முனகம மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU A
        E
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று அதிகரிக்கப்பட மாட்டாது!

மேலும் சில பகுதிகள் முடக்கம்

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை