உள்நாடு

‘நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து யோசித்து ஒரு முடிவை எடுத்தேன்’

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து முழு மனதுடன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் பத்தில் ஒரு பங்கு கூட மாறவில்லை எனவும் காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது கட்சி அரசியலா அல்லது தற்போதைய நெருக்கடிக்கு தீர்வா என்பதை கட்சி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியை தாம் கைவிடவில்லை எனவும் கட்சி சார்பற்ற போராட்டத்திற்காகவே கட்சி சுதந்திரமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தமக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் மீது தமக்கு கோபம் இல்லை எனவும், கட்சியால் எடுக்க முடியாத ஆனால் எடுக்க வேண்டிய தீர்மானத்தை தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் கலந்துகொண்டுள்ளார்.

Related posts

அதிபர் – ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூ.5000 மேலதிக கொடுப்பனவு

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 219 பேர் அடையாளம்

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு