கிசு கிசு

நாட்டில் சிறுபான்மை என்ற ஒரு இனமே இல்லை

(UTV | கொழும்பு) – ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் பிரதிநிதி ஒருவர் அவசியம் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினர் தங்களுக்கான வாக்குகள் குறித்தே கவனம் செலுத்துகின்றனர். வடக்கு, கிழக்கில் மத ரீதியான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனினும், தெற்குடனான மத பிரச்சினை குறித்து கருத்துரைக்கின்றனர்.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாம் அறிந்துள்ளோம். இந்நிலையில், தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் ஆரம்பத்திலேயே பிரச்சினைகளை ஏற்படுத்தாமல், முதலில் அதன் திட்டங்களை வகுப்பது முக்கியமானதாகும்.

அதேநேரம், நாட்டில் சிறுபான்மை என்று ஒரு இனம் இல்லை. நாட்டில் இலங்கையர்கள் என்ற இனம் மாத்திரமே உள்ளது. இன ரீதியாக யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை..” என தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்? இதுதான் காரணமா?

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்

மைத்திரி – விஜயகலா சந்திப்பு பிழைக்குமா?