உள்நாடு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2730 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 5 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றையவர் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுறுதியானவருடன் தொடர்பினை பேணிய ராஜாங்கனை பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 678 பேர் நாட்டிலுள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய

editor

ஆறு மாதங்களுக்குள் தீர்வு – சஜித்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்