உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 2697 ஆக பதிவாகியுள்ளது

இதன்படி நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவுதெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவருக்கும் கந்தகாடு மற்றும் சேனாபுர பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இராஜாங்கனை பகுதியில் 12 வயதுடைய சிறுவனொருவனுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2012 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 674 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

அரசாங்கத்தை சந்தித்த IMF உயர்மட்ட பிரதிநிதிகள்

editor

ரயில் சேவைகளில் தாமதம்

வரவு செலவுத் திட்டம் இன்று