உள்நாடு

நாட்டில் கடும் வெப்பம் – சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் போதுமான அளவு சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும், விளையாட்டு பயிற்சிகளை நடத்தும் இடங்கள் குறித்து சுகாதார அதிகாரிகளிடம் ஆலோசனை பெறுமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உபுல் ரோஹண மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இது வெளிவேலைகளில் ஈடுபடும் நபர்களை கடுமையாக பாதிக்கின்றது.

எனவே, வீதிகளில் செய்பவர்கள் மற்றும் வெளிவேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில், வெப்பமான வானிலை காரணமாக பல பகுதிகளில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

எனவே, வெப்பமான வானிலை குறித்து பொதுமக்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் எனவும், கடும் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர – கோட்டாவின் காலத்தை மறந்துவிட வேண்டாம் – ரிஷாட் எம்.பி எச்சரிக்கை

editor

ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

editor

விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை – அனுரகுமார கிண்டல்

editor