உள்நாடு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென்றும் மக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பி மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (16) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

   

Related posts

காலி முகத்திடல் போராட்டத்திற்கு 9வது நாள்

தாமரை கோபுரம் நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரும்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு