சூடான செய்திகள் 1

நாட்டில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் வியாழக்கிழமை முதல் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்

(UTV|COLOMBO) எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு ,திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என்று பதிவாளர் நாயம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.

பதிவாளர் திணைக்களத்தின் மாளிகாவத்த மத்திய ஆவண பிரிவிலும் மாறகம ஸ்ரீ ஜெயவர்த்தன கோட்டே மற்றும் தெஹிவள வெள்ளவீதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதற்கான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கமைய சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ்களை விநியோகித்தல் மற்றும் காணி உறுதி செய்யும் ஒருநாள் சேவை வெற்றிகரமாக இடம்பெற்றதாக பாணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

 

Related posts

இலங்கையின் நகரங்களது நிலவரம்

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்