கிசு கிசு

“நாட்டில் இல்லாத ஒன்றுக்காக மாரடிக்க வேண்டாம்”

(UTV | கொழும்பு) – இவ்வாண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு நேற்று(05) ஆரம்பமாகிய நிலையில் வாதங்களுக்கும் ஒன்றும் குறையில்லாமல் இருந்தது எனலாம்.

அதன்படி, “இந்த நாட்டில் நல்லிணக்கம் எங்கே இருக்கிறது” எனக் கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், “இல்லாத ஒன்றுக்காக மாரடிக்க வேண்டாம்” என ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், நல்லாட்சியில் தான் வகித்த நல்லிணக்க அமைச்சை, இந்த அரசாங்கம் முற்றாகவே அழித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

கனடா, ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தை, இலங்கையில், தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறதென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார் எனச் சுட்டிக்காட்டிய மனோ கணேசன், கனடா சட்டம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இந்நாட்டில் எங்கே ஐயா, நல்லிணக்கம் இருக்கிறது என, சுரேன் ராகவனிடம் கேட்டார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என உங்கள் அரசாங்கம் சொல்கிறது. ஆனால், சிறைத் தண்டனை கைதியான பெளத்த தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்புக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்க் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை. சிங்களவருடன் சேர்ந்து இந்நாட்டில் வாழவே தமிழரும் முஸ்லிம்களும் விரும்புகின்றோம். ஆனால், உங்கள் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் ஒன்றென அல்லவா இருக்கிறது? இதுவா தேசிய நல்லிணக்கம் எனக் கேள்வியெழுப்பிய மனோ கணேசன், இந்த அரசாங்கத்தில் இல்லாத ஒன்றுக்காக மாரடிக்க வேண்டாமென, சுரேன் ராகவனிடம் கேட்டுக் கொண்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்

திருமண பந்தத்தில் இணைந்த யோஷித ராஜபக்ஷ [PHOTOS]

126 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நேபாள பெண்! (VIDEO)