உள்நாடு

‘நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய புதிய சூத்திரம்’

(UTV | கொழும்பு) –நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமெனில் கிராமத்திற்கு வந்து தமது பணிகளைக் காட்டுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, பொஹொட்டுவ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமன்றி ஏனைய கட்சிகளுக்கும் வருமாறு அழைப்பு விடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி மக்களையும் வரச் சொல்லுங்கள். ஜேவிபியையும் வரச் சொல்லுங்கள். ஒரு பகுதியை எடுத்து பயிரிட வேண்டும். நம்மை விட ஏக்கருக்கு இரண்டு மடங்கு வசூல் கிடைத்தால் அரசிடம் கேட்கலாம். ஆனால் நீங்கள் அதை செய்ய முடியாது என்றால், அது ஒரு விஷயமே இல்லை. அதிகாரம் தேவைப்பட்டால், அவர்களால் வேலை செய்ய முடியும் என்பதைக் காட்டுங்கள். கிராம மட்டத்திற்கு வந்து செய்யுங்கள். அனைத்து தரப்பினருடனும் பேசி அனைவரையும் ஒன்றிணைக்க தயார் என அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்படாது

யாழில் பழைய கச்சேரியை பார்வையிட்ட சீன தூதுவர் அடங்கிய குழுவினர்!

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை