அரசியல்உள்நாடு

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் – வீடியோ

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையிலிருந்து வெளிநாடொன்றிற்கு சென்றுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுதி செய்துள்ளது.

இன்று காலை அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள அவர் பொதுத்தேர்தல் நடவடிக்கைகளிற்காக நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

மருத்துவபரிசோதனைக்காக அவர் முன்னரே வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பிரச்சார நடவடிக்கைகளிற்காக அவர் தனது பயணத்தினை அவர் தாமதித்தார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து வெளியேறவுள்ளது குறித்து அவர் கட்சிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளார், அதேபோன்று மருத்துவபரிசோதனை முடிவடைந்த பின்னர் பொதுத்தேர்தல் நடவடிக்கைகளிற்கு கட்சிக்கு தலைமை தாங்குவதற்காக மீண்டும் நாட்டிற்கு திரும்புவேன் என அவர் தெரிவித்துள்ளார் என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த புதிய பாடதிட்டம் அவசியம்

மரண தண்டனை அமுலுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டனர்