உள்நாடு

நாட்டிற்கு இம்மாத இறுதியில் 16 இலட்சம் தடுப்பூசிகள்

(UTV | கொழும்பு) – இந்திய தயாரிப்பான அஸ்ரா செனெக்கா (Astra Zeneca Vaccine) என்ற கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு எதிரான 16 இலட்சம் தடுப்பூசி இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைச்சின் கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை மக்கள் தொகையில் 20 சதவீதத்தினருக்கு 16 இலட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பங்களிப்பு செய்துள்ளது.

முதலாவது கட்டத்தின் கீழ் வழங்கப்படும் 16 இலட்சம் தடுப்பூசிகளுக்கு பின்னர் ஏனையவற்றையும் பெற்றுக்கொடுப்பதற்கு கொவெக்ஸ் நிறுவனம் உடன்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகத்தின் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் விடேச பிரதிநிதி விசேட வைத்தியர் பாலித அபயகோன் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான தகவல் | வீடியோ

editor