உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க  பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின், எகலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, கலவான, நிவித்திகல, எலபத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​

இதேவேளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, குருணாகலை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

சீரற்ற காலநிலையினால் 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அரசுக்கு ஆதரவு வழங்கிய மூவர் எதிர்கட்சியில் அமர்ந்தனர்