சூடான செய்திகள் 1

நாட்டின் 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்-கட்சி பேதமின்றி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும்

(UTV|COLOMBO) 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக கட்சி பேதமின்றி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும் என்று பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தினால் சுயாதீன நிறுவனங்கள் அனைத்தும் செயலிழந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார். பொலிஸ், அரச சேவை என்பன அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த 19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் தேவை உணரப்பட்டது.

இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் கூறினார். புத்தளம் ஆனமடுவப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நேற்று திறந்து வைத்ததன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

 

 

 

Related posts

கடான – திம்பிகஸ்கடுவ பகுதியில் வெடிப்பு

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

பிரதமரை சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர்