உள்நாடு

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்றும் கடும் மழை

(UTV|கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று (21) கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று(21) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி சபரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இன்று முதல் மூன்று நாட்களுக்கு வான் சாகச கண்காட்சி

’22’ இற்கு உதவக் காரணத்தை சொன்ன சஜித்

கிளீன் ஸ்ரீலங்கா மாகாண ஒருங்கிணைப்பு மையம் யாழில் திறப்பு

editor