சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

(UTV|COLOMBO) – சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணத்தில் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

தேர்தலில் வாக்குப்பதிவு குறையும்

புத்தாக்கமும் ஆய்வும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றித்துப் பயணிப்பவை – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்