சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை

(UTV|COLOMBO) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைந்து செல்வதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

 

Related posts

ஐக்கிய தேசிய முன்னணினர் மற்றுமொரு கலைந்துரையாடல் இன்று

ஹெரோயினுடன் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது

முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்படுவதாக குற்றச்சாட்டு