உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு களுத்துறை  கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீண்டும் இன்று பிற்பகல் 2மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு களுத்துறை  கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

அமைச்சர் குமார ஜயகொடிக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு

editor

 தினேஷ் சாப்டர் மரண மர்மம் 02 வாரங்களில் வெளியிடப்படும் -டிரான் அலஸ்