சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் சேவை வழமைபோன்று

(UTV|COLOMBO) இலங்கை தனியார் பஸ் சங்கத்தினர் நேற்று (9ஆம் திகதி) நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுள்ள புதிய தண்டப்பணங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் ஊழியர்கள் சிலர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ள போதிலும், நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் சேவை வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக செய்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பஸ் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தனியார் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமது சங்கத்தினர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லை என அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஜனாதிபதி கென்யா விஜயம்

அனைத்து மாவட்டங்களதும் இறுதி முடிவுகள்

ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்ய உத்தரவு