உள்நாடு

நாட்டின் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டின் சில பகுதிகளில் இன்று (01) காலை 10 மணி முதல் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி – முதுங்கொட (புதிய வீதி) பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சியம்பலாபேவத்தை, பியகம, தெல்கொட, உடுபில, அக்குருமுல்ல, கந்துபொட, தெமலகம, பெலஹெல, தெகட்டன, இந்தோலமுல்ல, தொம்பே, நாரன்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு!

 இன்றய (31.05.2023) வானிலை அறிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்வு