சூடான செய்திகள் 1

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

(UTVNEWS|COLOMBO) – மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பதுளை அம்பாறை மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று(23)

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி