சூடான செய்திகள் 1

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை காலநிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக மேல், தென், சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்

மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்திக்க உள்ளோம்

பன்னிப்பிட்டியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ