உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் ஆறு மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

(UTV | கொழும்பு) – பதுளை, களுத்துறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் நுவரெலியா ஆகிய 6 மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய வாக்களிப்பை நடத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் , மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மேலும் 15 வாக்களிப்பு ஒத்திகைகளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அமரவீர, லசந்த, துமிந்த ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவு!

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!

பெரிய வெங்காயத்திற்கு அறவிடும் விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு