உள்நாடு

நாட்டினை முடக்க எந்த திட்டமும் இல்லை

(UTV | கொழும்பு) – தற்போதைய சூழ்நிலையில் நாட்டைப் முடக்குதலோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டமோ எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றினை கருத்தில் கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், எனினும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசியினை பெறுவது கொவிட்-19 சவாலை சமாளிக்க உதவும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று…

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் – செந்தில் தொண்டமான்

editor