உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்

நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இன்று (09) முற்பகல் நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது.

பின்னர் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் செயற்பட்டு வந்த நிலையில், சில பகுதிகளுக்கு மாத்திரம் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தன.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உபகுழு

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் – வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி அநுர

editor

எதிர்வரும் 23ம் திகதி அவசரமாக கூடவுள்ள பாராளுமன்றம்…