உள்நாடு

நாடு முழுவதும் மின்வெட்டு – நாளை வௌியாகவுள்ள தகவல்

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு ஊடாக விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மின்சக்தி அமைச்சும் விரிவான விசாரணையை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.

இதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறு மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது, இறுதியாக 2023 டிசம்பர் 9ஆம் திகதி மின்வெட்டு ஏற்பட்டது, மேலும் மின்சாரத்தை மீட்டெடுக்க சுமார் 6 மணிநேரம் சென்றது.

கொத்மலையிலிருந்து பியகம வரையிலான மின்சார விநியோகக் கம்பியில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இதேபோன்று, 2016 மார்ச், 2020 ஓகஸ்ட் மற்றும் 2021 டிசம்பர் மாதமும் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“21 பணிப்புறக்கணிப்பில் மாற்றமில்லை”

துருக்கி விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் விபத்து

ஸ்பா நடத்துவதில் புதிய சட்டம்