உள்நாடு

நாடு திரும்பிய ஜனாதிபதி!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணங்களை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

டுபாய் எமிரேட்ஸ் விமான சேவையின் EK650 விமானத்தில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தக் காலப்பகுதியில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற பொருளாதார உச்சி மாநாடு, உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு, ஜி77 மற்றும் சீனாவின் 3வது தெற்கு உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை ரயில் சேவையின் அவசர அறிவிப்பு.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை