உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி!

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை நியமிப்பது தொடர்பில் கட்சி அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை நடத்தியது. குறித்த யோசனை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் ஆசியும் கிடைத்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என சட்டத்தரணி சாமரி பெரேரா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் தடுப்பூசி செலுத்துகை தொடர்பிலான விபரம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

ஜனாதிபதி அநுரவின் தீர்மானத்தை இடை நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

editor