உள்நாடு

நாடாளுமன்றத்தில் புதிய நிதிக் குழு

(UTV | கொழும்பு) –  நாடாளுமன்ற அமர்வு முடிவடைந்த நிலையில் இரத்து செய்யப்பட்ட அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்ற குழு இன்று (10) ஸ்தாபிக்கப்பட்டது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது சபையில் அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக்குழுவினால் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

நிதிக்குழுவுக்கு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் அரசாங்கத்தில் சேவையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுராத்த, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத், நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர். சீதா ஆரம்பேபொல, நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர். சுரேன ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகரேன, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்ற உறுப்பினர் இசுராமன் தொடங்கொட, நாடாளுமன்ற உறுப்பினர் அனுபத் பஸ்குவா, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

நிலையியற் கட்டளை 121 இன் விதிகளின்படி தெரிவுக்குழுவினால் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவில் பணியாற்றிய காஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார, குமார வெல்கம திலான் பெரேரா, சரத் வீரசேகர மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் அந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

துமிந்த திஸாநாயக்க, ஷெஹான் சேமசிங்க சிறிபால கம்லத், சீதா அரம்பேபொல, ஹர்ஷன ராஜகருணா மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் புதிதாக உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களாவர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையில் அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக பணியாற்றினார்.

புதிய குழுவிற்கான தலைவர் நியமனம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

Related posts

ஓய்வூதிய அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி

இலங்கையில் 187வது கொரோனா மரணம் பதிவு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது