உள்நாடு

நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் நாயகம் Martin Chungong பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் Martin Chungong இன்று (12) பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமரின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மார்ட்டின் சுங்கோங் நேற்று இலங்கை வந்தடைந்தார்.

மார்ட்டின் சுங்கோங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுங்கோங் நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related posts

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை இன்று ஆரம்பம்

மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு

ஐ.சி.சி. கூட்டத்தில் கால அவகாசம் வழங்குமாறு – ஷம்மி சில்வா வேண்டுகோள்