உள்நாடு

நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை நாளை முதல் நீக்கம்

(UTV | கொழும்பு) –  கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியிலிருந்து நாளை அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நாளை நீக்க எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயணத் தடை விதிக்கப்பட்ட குறித்த காலப்பகுதியில் மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

எனினும் பயணத் தடைகள் நீக்கப்பட்ட பின்னரும் மக்கள் ஒன்று கூடாமல், சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 2-3 வாரங்களில் மக்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி செயற்பட்டால், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

இராணுவத்தினர் 71 பேருக்கு பதவி உயர்வு

IMF ஆதரவு தொடர்பில் பிரதமரின் நம்பிக்கை

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்