உள்நாடு

நாடளாவிய ரீதியில் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) – இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான தன்மை உருவாகியுள்ளமையினால், நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

“அடித்து வளர்த்தாட்டிவிட்டேன்” சாய்ந்தமருது கொலையின் முழு விபரம்!

நெருக்கடி கலை முகாமைத்துவம் என்ற வழிகாட்டி கைநூல் கையளிப்பு

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்