உள்நாடு

நாடளாவிய ரீதியில் சுமார் 10,000 ஹோட்டல்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கோதுமை மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 ஹோட்டல்களில் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இது தவிர, கோதுமை மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளின் கேன்டீன்களில் கிட்டத்தட்ட பாதி மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் அரசு நிறுவனங்களில் 3,000 கேன்டீன்களும், பாடசாலைகளில் 4,600 கேன்டீன்களும் இயங்கி வருகின்றன.

மேலும், கோதுமை மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நிகழ்வுகளுக்கான (திருமண வீடுகள், மரண வீடுகள் மற்றும் மரண வீடுகள்) உணவு மற்றும் பான விநியோக சேவைகள் (கேட்டரிங்) கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அசேல சம்பத் தெரிவித்தார்.

Related posts

வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கும் ராஜபக்ஷர்கள் கிளர்ச்சிக்கும் வேறுபாடு இல்லை

வட்டி விகிதத்தில் மாற்றம்

சாய்ந்தமருதுவில் வெள்ளை வேன் கடத்தல் – விழிப்பாக இருக்குமாறு பள்ளிவாசல் எச்சரிக்கை