கிசு கிசு

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை வலியுறுத்தி அரசுக்கு கடும் கோரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நாளுக்கு நாள் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் நாடு அபாயமான கட்டத்திற்கு செல்லும் முன்னர் நாடளாவிய ரீதியான முடக்கம் தேவையென சுகாதார பிரிவுகளால் அரசுக்கு கடும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் மட்டும் இனங்காணப்பட்ட 194 தொற்றாளர்களில் கம்பஹா மாவட்டம் தவிர்ந்த 16 பிரதேசங்களில் இருந்தும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 05 நாட்கள் தீர்மானமிக்க நிலையில், பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது, மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இலக்கங்களை குறித்துக் கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் குறித்த வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க முடியும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெருமளவான ஊழியர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர முகவரி மற்றும் தற்காலிக முகவரி, தொலைபேசி இலக்கங்களை ஊழியர்கள், நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஊழியர்களுக்கான விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“மருந்துகள் பற்றாக்குறையினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் நிதி அமைச்சரே பொறுப்பு”

சுசில் பிரேமஜயந்தவின் பதவி எஸ்.பி’க்கு

எண்ணெய் இருப்புக்கள் தீர்ந்துவிட்டன…