உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(UTV|கொழும்பு) -இன்று(23) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆறு மணி வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 26ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை(24) காலை ஆறு மணிக்கு நீக்கப்படவுள்ளது.

குறித்த எட்டு மாவட்டங்களிலும் நாளை(24) நண்பகல் 12 மணியிலிருந்து 27ஆம் திகதி வௌ்ளிக்கிழமை காலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 27ஆம் திகதி நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது.

Related posts

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை

‘சி யான் 06’ க்கு இலங்கை அனுமதி !

சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் – டில்வின் சில்வா

editor