கிசு கிசு

நாடளாவிய ரீதியாக திடீர் மின் தடை

(UTV | கொழும்பு) – அண்மையில் நாடளாவிய ரீதியாக ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளர் சுஜீவ அபயவிக்ரமவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்சார கட்டமைப்பில் உள்ள ஒழுங்கற்ற திட்டம் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள முழுமையான மின் தடையை தடுக்க முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மின்சார சபையின் பிரதி பொது மேலாளர் சுஜீவ அபயவிக்ரம கடிதம் மூலம் மின்சார சபைக்கு இதனை அறிவித்துள்ளார்.

மின்சார சபை கட்டமைப்பு உரிய முறையில் திட்டமிட்டிருந்தால் சிறு தவறு ஏற்பட்டாலும் கட்டமைப்பு முழுமையான செயலிழக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தை சரிப்படுத்தவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் நாடு இந்நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்? இதுதான் காரணமா?

Gmail மற்றும் Google drive ல் சிக்கல்…

உண்மையை வெளியிட்ட பிரபல நடிகை?