வகைப்படுத்தப்படாத

நாகை கடற்தொழிலாளர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவததை கண்டித்து நாகை கடற்தொழிலாளர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதனால் 1800 விசைப்படகுகளும், 8 ஆயிரம் கண்ணாடியிழை படகுகளும் கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்ததாக கூறப்படும் தமிழக கடற்தொழிலாளரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

තලවකැලේ නගරයේ වෙළඳසැල් හදිසි පරීක්‍ෂාවකට

ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாட்டில் உலகத்தலைவர்கள்

Samoa beat Sri Lanka 65-55