வகைப்படுத்தப்படாத

நாகசேனை நகர பொது மலசலகூடம் உடப்பு தனியார் நிலப்பகுதியை ஆக்கிமிக்க முயற்சிப்பதாக பொது மக்கள் குற்றச்சாட்டு

(UDHAYAM, COLOMBO) – நாகசேன நகரின் பொது மலகூடத்தை உடைத்தமை தொடர்பில் நுவரெலியா பிரதேசபைக்கு முறையிட்ட போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

நுவரெலியா பிரதேச சபைக்குற்பட்ட நாகசேன பொது மலசலகூடமானது கடந்த இரு தினங்களுக்கு முன் இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளாதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்

நுவரெலியா பிரதேச சபையினால் குறித்த மலசலகூடம் நீண்டகாலமாக கவனிப்பாரற்ற நிலையில் இருந்து வந்துள்ளது

இந் நிலையில் அக்கரப்பத்தனையிலிருந்து தலவாக்கலை நோக்கிவரும் கொத்தமலை ஓயா ஆற்றுப்பகுதியை அன்மித்த பொது மலசலகூட நிலப்பகுதியை தனியார் கையகப்படுத்தும் நோக்கிலேயே பொது மலசலகூட கட்டிடத்தை உடைத்துள்ளதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்

நாகசேன நகருக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி உடைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடம் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபை கவனத்திலெடுத்து குறித்த பொது மலசலகூடத்தை புனரமைத்து போதுமக்கள் பாவனைக்கு விடுமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

විදුලිය සැපයීම යතා තත්වයට

பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது