கேளிக்கை

நஸ்ரியாவுக்கு வந்த SMS … கடுப்பான நஸ்ரியா!

(UDHAYAM, COLOMBO) – தமிழில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நஷிம்.

இவரும் மலையாள நடிகர் பகத் பாசிலும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து நடிப்பில் இருந்து விலகிவிட்டார் நஸ்ரியா.

இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் அம்மாவாக போகிறார் என்றும் மலையாளத்தில் பிரபலமான சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியது.

நஸ்ரியா மொபைலுக்கும் பகத் மொபைலுக்கும் ஏகப்பட்ட வாழ்த்து செய்திகள்.

இருவரும் என்ன ஏது என்று விசாரித்த போதுதான் அந்த சேனல் வெளியிட்ட செய்தி தெரிய வந்தது.

இதனால் கடுப்பான நஸ்ரியா, ‘உங்க சோர்ஸ்கிட்ட இன்னொரு வாட்டி செக் பண்ணிட்டு நியூஸ் போடக் கூடாதா? நீங்க சொல்றதுல உண்மையில்லை. நான் கர்ப்பமா இல்லைஎன்று கூறியிருக்கிறார் டிவிட்டரில்.

Related posts

விஜய்யின் சுவாரஷ்யமான தகவலை வெளியிட்ட சஞ்சீவ்

காட்டு தீயால் அவதிப்படும் பிரபல நடிகை

உங்கள் UTV இப்பொழுது TikTok இலும்