(UTV | ரஷ்யா) – ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவால்னிக்கு சிகிச்சை அளித்த ரஷ்ய மருத்துவர் திடீரென உயிரிழந்துள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவால்னி சைபிரியாவில் உள்ள ஒம்ஸ்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் நிலையில் அவருக்கு செர்ஜி மக்ஸிமிஷின் என்ற மருத்துவர் சிகிச்சை அளித்தார்.
இந்நிலையில் செர்ஜி மக்ஸிமிஷின் பணியின் போதே திடீரென உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் நெஞ்சு வலி காரணமாக செர்ஜி மக்ஸிமிஷின் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/01/utv-news-alert-4-1024x576.png)