வகைப்படுத்தப்படாத

நலன்புரி நிலையங்களில் 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்து 700ற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன மேலும் தெரிவிக்கையில் ஆயிரத்து 540 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 7 ஆயிரத்து 814 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நிர்கதியானவர்கள் 355 நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றார்கள். நிவாரணங்களை வழங்க அரசாங்கம் 125 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கின்றது.

நிவாரண பணிகள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் பிரதேச செயலாளர்களுகம்இ மாவட்ட செயலாளார்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு உலர் உணவு விநியோகிக்கப்படும். தேவை ஏற்பட்டால் நிவாரண விநியோகத்தை நீடித்துக் கொள்ள முடியும் என ராஜாங்க அமைச்சர் கூறினார்.

மதிப்பீட்டுப் பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. நிவாரணப் பணிகளை துரிதமாக முன்னெடுக்க பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவார்கள்.

இரத்தினபுரி, மாத்தறை, நில்வளா போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 19 நாடுகள் இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க முன்வந்திருக்கின்றன. இதுவரை இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு உதவியாக கிடைத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.

Related posts

Drug peddler arrested in Tangalle

Australia beat England to win 2nd Women’s Ashes ODI

சாகல ரத்நாயக்கவின் அதிரடி தீர்மானம்