கேளிக்கை

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலை மையப்படுத்தி திரைப்படம்

(UTV|கொழும்பு)- தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதலை மையமாக வைத்து ஒரு படம் உருவாகியுள்ளது.

‘நானும் சிங்கிள் தான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் பிரபலமானது. அதன் அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம் என படத்தின் இயக்குரன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் இவர்கள் தான்

இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

Related posts

மாலினி பொன்சேகாவின் சகோதரர் கொரோனாவால் பலி

சுவாதிக்கும் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிக்கும் டும் டும் டும்

விஜய்க்கு பயந்து தள்ளிபோகும் சூர்யா