கேளிக்கை

நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா?

(UTV|INDIA)  நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கொலையுதிர்க்காலம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் மற்றும் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

மேற்படி இந்த படத்தின் இந்தி ரீமேக் தான் ‘காமோஷி. பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள இந்த படத்தையும் ‘கொலையுதிர்க்காலம்’ படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் ‘காமோஷி’ திரைப்படம் வரும் 31ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே ‘மே ரிலீஸ்’ என விளம்பரம் செய்யப்பட்டு வரும் ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படமும் அதே மே 31ஆம் திகதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரே கதையில் நயன்தாராவும், தமன்னாவும் நடித்து ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் யாருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்பதை அறிய இருதரப்பு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

 

 

Related posts

பிரபல நடிகையின் படத்தில் தமன்னாவின் கிளாமரான ஆட்டம்…

கிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் யூனிவர்ஸல்

கவர்ச்சி உடை சர்ச்சை: ரசிகருக்கு பதிலடி கொடுத்த ரகுல் ப்ரித்திசிங்