கேளிக்கை

நயன்தாராவை ஏன் பிடிக்கும்?

(UTV|INDIA)-நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாகவே நெருங்கி பழகி வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்றார்கள். டுவிட்டரில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். இதனால், இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று கூறப்பட்டது. என்றாலும், நயன்தாராவோ, விக்னேஷ் சிவனோ காதலிப்பதாக சொல்லவில்லை. மறுக்கவும் இல்லை.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, விழா மேடையில் பேசும் போது, “நான் விருது பெறுவதற்கு காரணமாக இருந்த பெற்றோர், சகோதரர், வருங்கால கணவர் ஆகியோருக்கு நன்றி” என்று கூறினார்.
இதன்மூலம் விக்னேஷ் சிவனை காதலிப்பதை முதல் முறையாக நயன்தாரா வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். எனவே, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு டி.வி. இசை நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், தன்னை நயன்தாரா கவர்ந்தது எப்படி? என்பது பற்றி கூறும்போது, “நயன்தாரா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை. அதற்கெல்லாம் மேலாக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட இரும்பு பெண்மணி. இதன் காரணமாக அவரை எனக்கு அதிகமாக பிடிக்கும். அந்த வகையில் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன்” என்றார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

‘கோலமாவு கோகிலா’ இந்தியில்

மும்பையில் ஸ்ரேயா ரகசிய திருமணம்…

‘பூமி’ வைரலாகிறது [VIDEO]