கேளிக்கை

நயனுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்

(UTV|INDIA) இயக்குனர் என்பதை தாண்டி நயன்தாராவின் காதலராக அனைவராலும் அதிகம் அறியப்பட்டவர் விக்னேஷ் சிவன். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும், இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்பது தான் ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பு.

ஆனால் இவர்கள் இருவருமே தங்களுடைய காதலில் எந்த அளவிற்கு சீரியசாக இருக்கிறார்களோ, அதே அளவிற்கு, தங்களுடைய வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இந்த வருடமாவது திருமணம் நடைபெறுமா? என்பதும் சந்தேகமே…

இந்நிலையில் தன்னுடைய காதலி நயன்தாராவிற்கு அவ்வப்போது, ஏதேனும் சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டே இருக்கும் விக்னேஷ் சிவன், தற்போது, பியானோவில், இளையராஜா இசையில், புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற அழகிய காதல் பாடலை வாசித்து அசத்தியுள்ளார். குறித்த காட்சியை அவதானித்த ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

 

 

 

 

Related posts

“பொன்னியின் செல்வன்” திரைப்பட டிரைலர் வெளியானது

பிரபல நடிகையை நடுரோட்டில் வைத்து கதற விட்ட ரவுடிகள்

புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரஜினியின் முத்து