சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணை; சுதந்திர கட்சி பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் ஒன்று அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 25 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் வருகை தந்திருந்ததாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

அதன்படி இந்தக் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

அதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்