சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 09 உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி மஹிந்த சமரசிங்க, பியசேன கமகே, துமிந்த திஸாநாயக்க, மானுஷ நாணயக்கார, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஃபைசர் முஸ்தபா மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க குழுவில் உள்ளனர்.

இதேவேளை சுதந்திர கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்கு தயாராக இருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த விவாதம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளதுடன், 9.30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 21 ஆம் திகதி பிரதமருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நாங்கள் இணைய மாட்டோம்-மனோ கனேசன்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அநியாயமாக சிறையில் வாடிய ரம்ஸி ராசிக் – முழுமையாக விடுதலையானார்